சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் (Stockholm Tamil Sangam – STS), சுவீடனில் வாழும் தமிழர்களுக்கென்று ஒரு ஒருங்கிணைந்த சமூக மேடையாக உருவானது. இந்த சங்கம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, பாரம்பரியம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு நாளில் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் தோற்றம், “தமிழ் வளர வேண்டும்”, “தமிழர்கள் இணைந்து நட்புடன் வாழ வேண்டும்” என்பதையே அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பத்தில் சில குடும்பங்களின் ஒத்துழைப்புடன் தொடங்கிய இச்சங்கம், இன்று 750-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஒரு வலுவான சமூக அமைப்பாக வளர்ந்துள்ளது.
© All Copyright by www.stockholmtamilsangam.se | Designed By Enmam Digitech LLP