அனைவருக்கும் வணக்கம்,

களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நம்மை தொடர்புகொண்டு அவர்களின் நிலையை நமக்கு விளக்கியது.

கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம்.

சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். இன்று உலகை சூழ்ந்திருக்கும் கொரானா பேரிடர் அந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத்தையும் நசித்துவிட்டது.

அவர்களை நலன் கருதி சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் மற்ற நோர்டிக் தமிழ் சங்கம் இணைத்து இந்த முன்னெடுப்பை செய்கிறோம். உங்கள் உதவிகளை சுடாக்கோம் தமிழ்ச் சங்க வாங்கி கணக்கிற்கு செலுத்துங்கள். Bank Giro :488-2312, நன்றி!