சுவீடனில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு குழுமம் இருந்தால், நட்பு பாராட்டலாம், தமிழர் பண்பாட்டு விழாக்கள் எடுக்கலாம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிடலாம், சிறுவர்களுக்கு தமிழ் மீது ஈடுபாடு எற்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளில் ஸ்டாக்ஹோம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது.  இச்சங்கம் சுவீடனில் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சங்கத்தின் நோக்கம்:

* சங்கம் இலாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கும்.

* சங்கம் எந்த அரசியல் தொடர்பற்ற அமைப்பாக இருக்கும்.

* சங்கம் எந்த வித சாதி, சமயம் மற்றும் மதம் தொடர்பற்ற அமைப்பாக இருக்கும்.

* சங்கம் “தமிழ்”, “தமிழர் பண்பாடு”, மற்றும் “தமிழர் பாரம்பரியம்” ஆகியவற்றை ஊக்குவிப்பதற்க்கும், போற்றுவதற்க்கும், அதன் மேம்பாட்டிற்கு உதவும் அமைப்பாக இருக்கும்.

* தமிழ் விழாக்கள் ஏற்பாடு செய்து, அதன் மூலம் அவ்விழாக்களின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் அமைப்பாக இருக்கும்.

* சிறுவர்களுக்கு “தமிழ்” மொழியின் சிறப்பை விளக்கும் விதமான நிகழ்ச்சிகளை சங்கம் ஏற்பாடு செய்யும்.

* இயல், இசை நாடகம் எனும் முத்தமிழையும் வளர்க்கும்விதமாக கலை நிகழ்ச்சிகளை சங்கம் ஏற்பாடு செய்யும்.

* தமிழர்களை ஒருங்கிணைக்க முற்படும் அமைப்பாக இருக்கும்.