அனைவருக்கும் வணக்கம்,
சுடாக்கோம் தமிழ்ச்சங்க விழாவில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து உங்கள் நிகழ்ச்சியை உறுதி செய்து கொள்ளுங்கள்.அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட விதிமுறைகள் மாறுவேடப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிப் பதிவுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன.

மாறுவேடப்போட்டி:

1.கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒன்றைத் தேர்வு செய்து மாறுவேடம் அணிய வேண்டும். முதலில் தலைப்பைத் தேர்வு செய்பவருக்குத் தலைப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
2. அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு உரையாடல் இருக்க வேண்டும் .
3. வேடத்திற்கு ஏற்றாற்போல் உரையாடல் அமைய வேண்டும் .
4. கண்டிப்பாகப் பேச்சில் அரசியலோ , மதமோ  அல்லது தனிப்பட்ட ஒருவர் புண்படும் கருத்துக்களோ இருக்கக்கூடாது.

கட்டுரைப்போட்டி:

1.கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒன்றைத் தேர்வு செய்து கட்டுரை எழுத வேண்டும். முதலில் தலைப்பைத் தேர்வு செய்பவருக்குத் தலைப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
2.கட்டுரை சொந்த நடையில் 40 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.கட்டுரைகள் 25/01/23 நாளுக்குள் எழுதி அனுப்ப வேண்டும்.
4.கட்டுரைகளைக் கட்டுரைப்போட்டிக்கான புலனக்குழுவில்(whatsapp) அனுப்ப வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

கலை நிகழ்ச்சிகள்:
1. முதலில் பதிவிடுபவருக்கு முன்னுரிமை, ஒதுக்கப்பட்ட நேரத்திற்கான பதிவுகள் வந்தடைந்ததும் கலைநிகழ்ச்சி முன்பதிவு இறுதி செய்யப்படும்.
2. இசை மற்றும் கருத்தியல் தமிழ் சம்மந்தப்பட்டவைகளாகவே இருத்தல் அவசியம்.
3. இந்த விழாவில் மேடை வாய்ப்பு குழு முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
4. குழு பங்கேற்புக்கு அதிகபட்ச நேரம் வயது (5 -10 வரை) 4 நிமிடங்கள் மற்றும் 11 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 நிமிடங்கள்.
5. ஒரு குழுவில் குறைத்த பட்சம் 4 நபர்கள் பங்கேற்க வேண்டும்.
6. இசைக்கோப்புகளுடன் உங்கள்  நடனத்தில் குறைந்தபட்சம் 2 நிமிடத்திற்கான நடனத்தை 2023-01-22 தேதிக்குள் கலாச்சார செயலாளர் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பொங்கல் விழா 2023 முன்பதிவை நிறைவுசெய்தவர்கள் கலைநிகழ்ச்சி பதிவைத் தொடரவும், இன்னும் பதிவிடாதவர்கள் கீழே உள்ள Link-ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

For registration click here – https://forms.office.com/e/0VzU9YvDc4